தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : மே 14, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பகுதி நேர வேலைக்கு சென்ற மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம், புது நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் யோகேஷ், 18; லாஸ்பேட்டை அரசு கலைக் கல்லுாரியில் விலங்கியல் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பகுதி நேர வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து தனது தந்தையின் பைக்கை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றார். இரவு வரை வராததால் சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us