தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கல்வி அமைச்சருக்கு வாழ்த்து
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கல்வி அமைச்சருக்கு வாழ்த்து
ADDED : செப் 10, 2024 06:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் கல்வி அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ரங்கநாதன் தலைமையில், துணை தலைவர்கள் முத்துராமன், ராமசிவராஜன், இணைச் செயலாளர்கள் கிறிஸ்துராஜ், சிவசுப்ரமணியன், ரமேஷ், பொருளாளர் சந்தானம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, பழக்கூடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஜானகிராமன், சம்பத், சங்கரநாராயணன், சுப்ரமணியன், செளகத், மாணிக்கம், இளமதியழகன், ராமசாமி, அழகேசன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
