/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் குறித்து கள ஆய்வு
/
முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் குறித்து கள ஆய்வு
முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் குறித்து கள ஆய்வு
முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் குறித்து கள ஆய்வு
ADDED : ஜூலை 17, 2024 06:22 AM
புதுச்சேரி : முதியோர் உதவித்தொகை பெறுவோர் உண்மையான பயனாளிகளா என வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி துவங்கவுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாமில் முதியோர், விதவை, முதிர்கன்னியர் என மொத்தம் 1.81 லட்சம் பேர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை பெற்றுவருகின்றனர்.
உதவித்தொகை பெறுவோர் குறித்து ஆண்டிற்கு ஒரு முறை வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் ஆய்வு செய்யப்படவில்லை.
இந்தாண்டு உதவித்தொகை பெறுவோர் குறித்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து துறை இயக் குநர் முத்துமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
புதுச்சேரியில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகள், உதவித்தொகை பெற தகுதியானவர்களா என வீடு வீடாக சென்று தணிக்கை செய்யப்பட இருக்கிறது.
எனவே, மாதாந்திர உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னியர் மற்றும் திருநங்கைகள் அனைவரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினுள்ளேயே வேறு ஏதேனும் பகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் தற்போதைய முகவரி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.