/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு மிரட்டல் பைனான்சியர் கைது
/
சிறுமிக்கு மிரட்டல் பைனான்சியர் கைது
ADDED : பிப் 15, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தாய் வாங்கிய கடனுக்காக, மகளை ஆபாசமாக திட்டி, மிரட்டிய பைனான்சியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் திருவிழாக் களில் பொம்மை வியாபாரம் செய்யும் பெண், கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஞானவேல் (எ) முத்துசாமி, 47; என்பரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கடந்த 4 மாதம் வட்டி பணம் தராததால், நேற்று முன்தினம், பைனான்சியர் ஞானவேல், போன் செய்துள்ளார். பெண்ணின் 17 வயது மகள் போனை எடுத்து பேசியுள்ளார். அப் போது, சிறுமியிடம் ஞானவேல் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார்.
சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், கோரிமேடு போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, ஞானவேலை கைது செய்தனர்.

