/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாதானுார் அரசு பள்ளியில் நுண்கலை கண்காட்சி
/
வாதானுார் அரசு பள்ளியில் நுண்கலை கண்காட்சி
ADDED : ஆக 05, 2024 04:23 AM

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப்பள்ளியில் நுண்கலை கண்காட்சி நடந்தது.
புத்தகப் பை இல்லா தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் படைப்பாற்லை ஊக்கப்படுத்தும் விதமாக உபயோக மில்லா பொருட்களை கொண்டு பல் வேறு அலங்கார பொருட்கள் பொம்மைகள் உருவாக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
விழாவில், ஆசிரியை ரேனு வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் வீரையன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலகுமார் ஒருங்கிணைத்தார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ரோட்டரி கிளப் தலைவர் அறிவழகன், செயலாளர் ஆறுமுகம், ஆளவந்தான் ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பார்வதி, செந்தமிழ் செல்வி, குமுதா, வேலவன், பூவிழி, சங்கரி, ஓம்சாந்தி, மலர்கொடி, சுஜாதா, சசிகலா, குப்புசாமி, சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.