/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
/
ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
ADDED : பிப் 28, 2025 04:44 AM

புதுச்சேரி: ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் உயிரிழப்பதை தடுக்கும் விதமாக, புதுச்சேரியில் கடந்த 12ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில், ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை போலீசார் பிடித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று மாலை, கோரிமேடு காவலர் பயிற்சி மைதானம் பகுதியில் வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.