/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுார் சின்ன ஏரியில் தீ விபத்து
/
திருக்கனுார் சின்ன ஏரியில் தீ விபத்து
ADDED : மே 28, 2024 03:41 AM

திருக்கனுார், : திருக்கனுார் சின்ன ஏரி பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மரங்கள் எரிந்து சேதமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனுார் பகுதி வீடுகள் மற்றும் வணிக வளாகத்தில் உருவாகும் அதிகப்படியான குப்பைகளை கொம்யூன் பஞ்சாயத்து குப்பை அள்ளும் ஊழியர்களிடம் வழங்காமல், திருக்கனுார் புறவழிச் சாலை சின்ன ஏரிப் பகுதியில் சிலர் நேரடியாக கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணியளவில் சின்ன ஏரிப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால், ஏரியில் இருந்த சீம கருவேல மரங்கள், செடிகள் தீப்பிடித்து எரிந்து கரும்புகை ஏற்பட்டது.
தகவலறிந்த பொதுப்பணித்துறை நீர்பாசனப்பிரிவு ஊழியர்கள் மற்றும் திருக்கனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராட்டி தீயை அணைத்தனர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.