ADDED : ஜூலை 09, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை, பேக்கரியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
லாஸ்பேட்டை, குளத்துமேட்டை சேர்ந்த சங்கர் மனைவி ரேவதி. இவர் லாஸ்பேட்டை, ஏர்போர்ட் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் பார்ட்சூன் பேக்கரியில் மின்கசிவு காரணமாக மின் மீட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அதற்குள் பேக்கரியில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
