நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்- கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திமீதி திருவிழா நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு அபி ேஷக ஆராதனைகள், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 6ம் தேதி மாலை பாகசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், 7 ம் தேதி இரவு அர்ச்சுனன்-திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.