/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்
/
கல்லுாரி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்
ADDED : மார் 03, 2025 04:20 AM

புதுச்சேரி : அலர்ட் தொண்டு நிறுவனம் மற்றும் கதிர்காமம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, மாணவர்களுக்கான முதலுதவி சிறப்பு பயிற்சி முகாமை நடத்தினர்.
கோரிமேடு போலீஸ் சமுதாய கூடத்தில் நடந்த முகாமிற்கு, சிறப்பு விருந்தினராக புதுச்சேரி காவல்துறை பயிற்சி மற்றும் நல வாழ்வு எஸ்.பி., ரங்கநாதன், கல்லூரி முதல்வர் கிஷோர்ஜான் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சியை துவக்கி வைத்து பேசினர்.
கல்லுாரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, முதலுதவி குறித்த சிறப்பு பயிற்சி பெற்றனர்.
ஏற்பாடுகளை அலர்ட் தொண்டு நிறுவன தலைவர் மனநாதன், பொது செயலாளர் தங்கமணிமாறன்,நிர்வாகிகள் தையல்நாயகி, நடேசன், ராஜ்குமார், சண்முகசுந்தரம்,ஆனந்தகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.