/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் சர்வதேச கருத்தரங்கம்
/
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் சர்வதேச கருத்தரங்கம்
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் சர்வதேச கருத்தரங்கம்
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் சர்வதேச கருத்தரங்கம்
ADDED : செப் 08, 2024 05:58 AM

புதுச்சேரி: விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின், புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் நரம்பியல் தொழில்நுட்பத் துறை சார்பில், முதல் சர்வதேச கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
முதல் நாள் கருத்தரங்கத்தை கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் ஸ்ருதி வரவேற்றார்.
பேராசிரியர் செந்தில் குமார் நரம்பியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச பேச்சாளர் பார்த்தசாரதி முருகேசன், அருண் பிரகாஷ், ரிச்சர்ட் இளமுருகன், மனிஷா, ஸ்ருதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இரண்டாம் நாள் கருத்தரங்கில், நரம்பு கடத்தல் ஆய்வுகள், எலக்ட்ரோமையோகிராபி மற்றும் மோட்டார் மூளை மேப்பிங் தலைப்பில் பயிற்சி பட்டறைகள் நடந்தது.
பேச்சாளர்கள் இளநாகராஜன், விஜய், ஜெயச்சந்திரன், ஜோவா பிசாரோ, மனோஜ் ராய், சனல் ஆபிரகாம், காமாட்சி, ஹேமா, நிர்மல் குமார் பங்கேற்றனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாநாட்டில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து 140 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஸ்ருதி, சந்துரு ஆகியோர் செய்திருந் தனர்.
கல்லுாரி இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் சில்வெஸ்டர் நன்றி கூறினார்.