/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 08, 2024 05:52 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்வி குழும உறுப்பினர் நிலா பிரியதர்ஷனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
தலைமை விருந்தினராக டி.சி.எஸ்., நிறுவனத்தின் துணைத் தலைவர் சங்கர நாராயணன் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டிடியூட் அப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் மலர்க்கண் சிறப்புரையாற்றினார்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் பேசுகையில், 'எமது கல்லுாரியை தேர்வு செய்த மாணவர்கள், பெற்றோர்கள், கல்லுாரிகளுக்கு ஒத்துழைப்பு தரும் நிர்வாகிகளுக்கு நன்றி. மாணவர்கள் மற்ற கல்லுாரிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வெளிபடுத்த வேண்டும். பன்னாட்டு கம்பெனிகளின் பணியில் சேர்ந்து தொழில்நுட்ப சான்றிதழ்கள் பெறவேண்டும்' என்றார்.
சங்கர நாராயணன் விஸ்வநாதன் பேசுகையில், 'மாணவர்கள் கற்றறிதல், தொடர்பு திறமை, ஒழுக்கம் மற்றும் உறவுகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் விடா முயற்சியுடன் தங்கள் திறமையை வெளிபடுத்தினால் மிகப் பெரிய வெற்றி பெற முடியும்' என்றார்.
கல்லுாரி வேலைவாய்ப்பு டீன் கைலாசம், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு துறை டீன் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி தேர்வு கட்டுபாட்டாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.