ADDED : மே 22, 2024 06:59 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் திரவுபதியம்மன் கோவில் முதலாமாண்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற திரவுபதியம்மன் கோவில் முதலாமாண்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான் சங்கல்பம், கலசபூஜை, திரவியாவதி ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது.
மாலை 6.00 கலசாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
