தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் விழா கொடியேற்றம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் விழா கொடியேற்றம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் விழா கொடியேற்றம்


ADDED : ஜூலை 08, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : அரியாங்குப்பம்: நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு செடல் திருவிழாவையொட்டி,  இன்று (9ம் தேதி) கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.

இவ்விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து, 9:00 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்புகட்டி விழா துவங்குகிறது. வரும் 12ம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 

தொடர்ந்து 13ம் தேதி காலை 9:00 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. 14ம் தேதி இரவு 7:00 மணிக்கு நாகமுத்துமாரியம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியும், 15ம் தேதி காலை 9:30 மணிக்கு இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து 108 முளைப்பாரி ஊர்வலம்,  நாகமுத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து மரப்பாலம் திருக்குளத்தில் கரைக்கப்படுகிறது.

தொடர்ந்து, 16ம் தேதி அம்மன் மற்றும் சிவன்பார்வதி வீதியுலாவும், முக்கிய நிகழ்வான 17ம் தேதி, மாலை 4:30 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது. 18ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 19ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும், 31ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us