/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியக்கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றம்
/
கன்னியக்கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றம்
ADDED : ஆக 02, 2024 01:35 AM

பாகூர்: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி அடுத்த கன்னியக்கோவிலில், பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி, மாலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வரும் 9ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அன்று மதியம் 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், மாலை 5.00 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடக்கிறது. 10ம் தேதி தெப்பல் உற்சவம், 11ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மாறன், விழாக்குழு தலைவர்
செந்தில்குமார் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.