/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெட்டப்பாக்கத்தில் கொடி அணிவகுப்பு
/
நெட்டப்பாக்கத்தில் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 13, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் போலீசார் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.
நெட்டப்பாக்கம் சிவன் கோவிலில் துவங்கிய கொடி அணிவகுப்பு கரிய மாணிக்கம் நான்கு முனை சந்திப்பு, நெட்டப்பாக்கம், சூரமங்கலம், கல்மண்டபம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று நிறைவடைந்தது.

