தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜிவ் - இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: மத்திய அரசு ஒப்புதல்

ராஜிவ் - இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: மத்திய அரசு ஒப்புதல்

ராஜிவ் - இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: மத்திய அரசு ஒப்புதல்


ADDED : செப் 14, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி: ராஜிவ் - இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

சென்னையில் இருந்து புதுச்சேரி வரும் இ.சி.ஆரில், கூனிமுடக்கில் இருந்து பங்கூர் வழியாக 6 வழிச்சாலை அமைய உள்ளது.

அதனால், ராஜிவ் சிக்னல் இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையான என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும். புதுச்சேரி - கடலுார் சாலை சிமென்ட் கான்கீரிட் சாலையாக மாற்ற ரூ. 90 கோடி நிதி தர மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கி புதுச்சேரியில் உள்ள ஏரி புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ. 4,750 கோடி குறைந்த வட்டிக்கு கடன் தர சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான திட்ட வரையரை தயாரித்து அனுப்ப உள்ளோம். முதற்கட்டமாக ஆண்டிற்கு ரூ. 1,000 கோடி நிதி பெற்று திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு 90 சதவீதம், மாநில அரசு 10 சதவீத நிதியின் மூலம் 59 ஏரிகளை ஆழப்படுத்த மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திடம் கோப்பு அனுப்ப உள்ளோம்.

மத்திய அரசின் நகர மேம்பாட்டு உட்கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ. 50 கோடி பெற்று, ரூ. 44 கோடியில் உப்பனாறு கரைகள் மற்றும் கீழ் பகுதி கான்கிரீட் தளம் அமைத்து, கழிவுநீர் நிற்காமல் செல்லும் திட்டத்திற்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி உள்ளோம்.

கிராமப்புறங்களில் ரூ. 99 கோடியில் சாலை திட்டங்கள் தயார் செய்துள்ளோம். தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில், வீராம்பட்டினம் பக்கம் ரூ. 42 கோடி மதிப்பில் படகுகள் நிறுத்தும் தளம் அமைக்கும் பணிக்கு ஒர்க் ஆர்டர் கொடுத்துள்ளோம் என கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us