/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுத்தடுத்து விபத்து: மூன்று கார்கள் சேதம்
/
அடுத்தடுத்து விபத்து: மூன்று கார்கள் சேதம்
ADDED : ஏப் 14, 2024 05:05 AM
புதுச்சேரி: புதுச்சேரி இருவேறு இடங்களில் நடந்த விபத்தில், மூன்று கார்கள் சேதமடைந்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுாரில் இருந்து நேற்று காலை தனியார் மின்சார பஸ் ராஜிவ்காந்தி சிக்னலை கடந்து இ.சி.ஆர்., சாலையில் சென்ற போது, அவ்வழியாக சென்ற கார் மீது மோதியது.
காரின் முன்பக்கம் சேதமடைந்தது. அதில், பயணம் செய்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுபற்றி வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து, கடலுார் சாலை முருங்கப்பாக்கம் வழியாக சென்ற டிப்பர் லாரி, டிரைவர் கட்டுப் பாட்டை மீறி, அவ்வழியாக சென்ற இரண்டு கார்களின் மீது மோதியது. இரு கார்களும் சேதமடைந்தன.
தகவலறிந்து, கிழக்கு பகுதி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய டிப்பர் லாரி, கார்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

