/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதி காங்., சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
/
ராஜ்பவன் தொகுதி காங்., சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ராஜ்பவன் தொகுதி காங்., சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ராஜ்பவன் தொகுதி காங்., சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : மார் 15, 2025 06:17 AM

புதுச்சேரி: மாசி மகம் கடல் தீர்த்தவாரியை முன்னிட்டு, வழக்கறிஞர் அணி தலைவரும், ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளர் வழக்கறிஞர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் மாசிமகத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மணி ஆகியோர் முன்னிலையில் மாசிமகத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், காங்., கட்சி வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ், ராஜ்பவன் தொகுதி வட்டார காங்., தலைவர் ஜெரால்ட், கணேஷ் நகர் சண்முகம், இளைஞர் காங்., செயலாளர் சித்தானந்தம், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமரன், நர்லா ஆரோக்கியசாமி, மர்வின், கார்த்தி, சுரேஷ், சிவக்குமார், கார்த்திக்கேயன், ஸ்ரீராம், அல்பர், பத்ராஸ், வழக்கறிஞர் கோவிந்தராஜி, ஆம்ஸ்ட்ராங், லொத்தி ஜேம்ஸ் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.