/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர் பா.ஜ., மாஜி தலைவர் வலியுறுத்தல்
/
பஸ் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர் பா.ஜ., மாஜி தலைவர் வலியுறுத்தல்
பஸ் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர் பா.ஜ., மாஜி தலைவர் வலியுறுத்தல்
பஸ் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர் பா.ஜ., மாஜி தலைவர் வலியுறுத்தல்
ADDED : மார் 06, 2025 04:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திற்கு, வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும் என பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் தாமோதரன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவை, கடந்த 2024ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் கொண்டாடுகிறோம். இதற்காக புகழ்பெற்ற ஆளுமைகளைக் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா முன்னேறி வருகிறது.
புதுச்சேரி மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பயனடையும் ஒரு பகுதி. இதன் மூலம் பெரிய வாய்க்கால் மேம்பாடு, கழிவுநீர் மறுவடிவமைப்பு, மார்க்கெட், கார் பார்க்கிங், ஸ்மார்ட் பஸ் நிலையம், புதிய விளையாட்டு அரங்கம் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் புதிய பஸ் நிலையம், புதிய விளையாட்டு அரங்கத்திற்கு வாஜ்பாய் அரங்கம் என பெயர் சூட்ட வேண்டும். உலகத்தரம் வாய்ந்த சாலை போக்குவரத்து, அனைத்து வீடுகளுக்கும் காஸ் சிலிண்டர் வழங்கியதுடன், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியவர் வாஜ்பாய். அவரது பெயரை சூட்டுவதன் மூலம் ஒரு சிறந்த ஆளுமை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.