/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் முதல்வர் குபேர் பிறந்த நாள்
/
முன்னாள் முதல்வர் குபேர் பிறந்த நாள்
ADDED : ஜூலை 30, 2024 05:09 AM

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் குபேர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி நகர தந்தை என அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் குபேர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், சட்டசபை துணை சபாநாயகர் ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் உள்ளிட்டேர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.