/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சி மக்களை வஞ்சிக்கிறது மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

ADDED : மே 10, 2024 12:52 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மூன்று ஆண்டுகளில், என்.ஆர். காங்., - பா.ஜ ஆட்சியில் மக்களை வஞ்சிப்பது தான் சாதனையாக உள்ளது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை பற்றி, தவறான பிரசாரம் செய்கிறார். என்ன சாதனை செய்தார் என்பதை சொல்லாமல், மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்.
புதுச்சேரி மாநிலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், எந்த திட்டத்தையும் முதல்வர் ரங்கசாமி நிறைவேற்றவில்லை.வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மக்களை வஞ்சித்தது தான் மூன்று ஆண்டுகளா என்.ஆர். காங்., - பா.ஜ ஆட்சியின் சாதனை உள்ளது. கல்வித்துறை பின் தங்கி உள்ளதால் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இதற்கு முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், முழு பொறுப்பேற்க வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு அனைத்திலும், இந்தியை திணிக்கும் வேலையை செய்து வருகிறது.
செவிலியர் படிப்பிற்காக, நீட் தேர்வை கொண்டு வருகின்றனர். இதனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி, மாணவர்கள் படிக்கும் எண்ணிக்கையை குறைக்கும் வேலையை செய்கின்றனர்.
இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மூன்று கட்ட தேர்தலில், இண்டியா கூட்டணி முன்னணியில்உள்ளது. நிச்சயமாக இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். காங்., தொண்டர் எனும் முறையில், ராகுல் பிரதமராக வேண்டும் என்பது என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.