/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை; மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு

ADDED : மார் 09, 2025 04:05 AM
திண்டிவனம் : மக்களை பற்றி சிந்திக்காமல், தன்னுடைய குடும்பத்தை பற்றி சிந்திக்கும் தி.மு.க.,ஆட்சிக்கு முடிவுரை எழுத இன்னும் 10 மாதங்கள் உள்ளது' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
மயிலம் அடுத்த காட்டுசிவிரி கிராமத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசுகையில், 'தி.மு.க.,ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றது. மக்களைப் பற்றி சிந்திக்காமல், தன்னுடைய குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் தி.மு.க.,ஆட்சிக்கு முடிவுரை எழுத இன்னும் 10 மாதங்கள்தான் உள்ளது. இந்த 4 ஆண்டு கால, ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் வடசென்னையில் மட்டும் மழை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் சென்னையிலுள்ள 14 சட்டசபை தொகுதிக்கு 6,000 ரூபாய் கொடுத்தோம். தெரு சுத்தம் செய்பவர்களில் இருந்து 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் வரை அனைவருக்கும் கொடுத்தோம். ஸ்டாலினுக்கு கொடுக்க மனமில்லை.
ஸ்டாலின் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும். இந்த மக்கள் விரோத தி.மு.க., அரசை அகற்ற வேண்டும்' என்றார்.