/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் ஐக்கியம்
/
மாஜி எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : ஏப் 05, 2024 05:37 AM

புதுச்சேரி: காரைக்கால் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, பா.ஜ.,வில் இணைந்தார்.
காரைக்கால் நிரவி, திருப்பட்டினம் தொகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., வி.எம்.சி.வி. கணபதி. இவர் கடந்த 1990 - 91 வரை, 1991 - 96 வரை இரு முறை அ.தி.மு.க., சார்பில் திருப்பட்டினம் நிரவி தொகுதி போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.
புதுச்சேரி சட்டசபையின் பொது கணக்கு குழு தலைவராகவும், அ.தி.மு.க., மாநில செயலாளராக பதவி வகித்தவர். பின், கடந்த 2003 முதல் 2006 வரை காங்., கட்சியின் மாநில செயலாளாக பதவி வகித்தார். இறுதியாக அ.தி.மு.க., கட்சியில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி, வேட்பாளர் நமச்சிவாயம் முன்னிலையில், பா.ஜ., கட்சியில் கணபதி இணைந்தார்.
பா.ஜ., கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவருக்கு உடனடியாக பா.ஜ., மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

