/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் முன்னாள் எம்.பி., ராமதாஸ் கருத்து
/
அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் முன்னாள் எம்.பி., ராமதாஸ் கருத்து
அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் முன்னாள் எம்.பி., ராமதாஸ் கருத்து
அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் முன்னாள் எம்.பி., ராமதாஸ் கருத்து
ADDED : ஜூன் 05, 2024 11:22 PM
புதுச்சேரி: அரசு செய்த தவறுகளை திருத்திக் கொண்டு,மாநிலத்தினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:லோக்சபா தோல்வி ஒரு அரசியல் சுனாமி போல் ஆளும் கூட்டணியை துடைத்தெறிந்து விட்டது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 28 தொகுதிகளில் ஆளும் கூட்டணி கட்சிகள் தோற்று இருக்கின்றன. முதல்வர் தட்டாஞ்சாவடியில் தோற்றிருக்கிறார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது மண்ணடிப்பட்டு தொகுதியில் தோற்றிருக்கிறார். இரண்டு எம்.எல்.ஏ.,க்களை தவிர அனைத்து அமைச்சர்களும், சபாநாயகரும் துணை சபாநாயகரும், தோற்று இருக்கின்றனர்.
புதுச்சேரியில் இப்படிப்பட்ட படுதோல்வி ஒரு ஆளும் அரசுக்கு எதிராக இதுவரை நிகழ்ந்தது இல்லை.
புதுச்சேரி மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசை நிராகரித்து விட்ட பிறகு இந்த அரசு நீடிப்பதில் எந்த ஜனநாயக நீதியும் கிடையாது.
எனவே மீதி இருக்கும் 22 மாதங்களுக்கு செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, புதுச்சேரியை உண்மையான வளர்ச்சிப் பாதைக்கு இந்த அரசு எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசிடம் பேசி மாநில அந்தஸ்தைப் பெற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தி 1042 மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.