/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வாட்ஸ் ஆப் புகார் எண் திரும்ப பெறப்பட்டது ஏன் மாஜி எம்.பி., ராமதாஸ் கேள்வி

ADDED : ஆக 07, 2024 05:33 AM
புதுச்சேரி, : பேனரை அகற்ற கொடுக்கப்பட்ட வாட்ஸ் ஆப் புகார் எண் யாருடைய அழுத்தத்தினால் திரும்ப பெறப்பட்டது என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் சப் கலெக்டர் பேனர் வைப்பதைத் தடை செய்து நடவடிக்கை எடுத்தார். விதியை மீறி பேனர் வைத்தால் பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு வாட்ஸ் ஆப் எண்ணையும் கொடுத்தார். பல வழக்குகளும் பதியப்பட்டன. இந்த நடவடிக்கை அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றது.
ஆனால் முதல்வரின் பிறந்த நாள் சமயத்தில் திடீரென அந்த வாட்ஸ் ஆப் எண்ணை சப் கலெக்டர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதனால் அனைத்து இடங்களிலும் மீண்டும் பேனர்கள், கட் அவுட்டுகள் தோன்றியுள்ளன.
என்ன நிர்வாக காரணத்திற்காக இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. யாருடைய அழுத்தத்தினால் அல்லது யாரை திருப்திப்படுத்த இந்த நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதுச்சேரியின் தலைமை நீதிபதி இந்த சட்ட விதி மீறலையும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காததையும் உயர்நீதிமன்றத்திற்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
முதல்வர், சட்டத்தை மதிப்பதாக இருந்தால், சட்டசபை கூட்டத்தில் புதுச்சேரியில் இனிமேல் பேனர்கள் வைப்பதை அனுமதிக்க முடியாது என, தீர்மானத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.