ADDED : மே 27, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி கடற்கரை சாலை, காந்தி திடலில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு எம்.எல்.ஏ.,க்கள் சிவக்கொழுந்து, ராஜவேலு, அறுமுகம், சாய் சரவணன்குமார், விக்னேஷ், நாராயணசாமி, அழகானந்தம், மோகன்தாஸ், அய்யப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, காங்., சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
