ADDED : மே 19, 2026 04:10 AM
சேத்தியாத்தோப்பு, மே 1 9-
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அள்ளூர் கட்டுக்கரையை சேர்ந்த வர் இளவரசன் , 3 8; வெளிநாட்டில் வேலை செய்து வ ந்தார். இவரது மனைவி மகேஸ்வரி, திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது, 13 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, வெளிநாட்டில் இருந்து வந்த இளவரசன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கடந்த 17 ம் தேதி, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளவரசன் , இறப்பதற்கு முன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோ பதி வை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அதில், தான் தற்கொலைக்கு மனைவி மகேஸ்வரி, அவரது சகோதரி மணிமேகலை , 3 7; மாமியார் அஞ்சலை , 6 1; மனைவியின் கள்ளக்காதலன் அஜித் ஆகியோ ர்தான் காரணம் என பேசியிருந்தார்.
வீடியோ பதிவின் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து மனைவி மகேஸ்வரி மற்றும் மணிமேகலை, அஞ்சலை, அஜித் ஆகியோரை கைது செய்து கடலுார் மத்திய சிறையி ல் அடைத்தனர்.
