/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் புனித நீர்: வில்லியனுார் மாதா கோவில் குளத்தில் சேர்ப்பு
/
பிரான்ஸ் புனித நீர்: வில்லியனுார் மாதா கோவில் குளத்தில் சேர்ப்பு
பிரான்ஸ் புனித நீர்: வில்லியனுார் மாதா கோவில் குளத்தில் சேர்ப்பு
பிரான்ஸ் புனித நீர்: வில்லியனுார் மாதா கோவில் குளத்தில் சேர்ப்பு
ADDED : ஆக 02, 2024 01:29 AM
புதுச்சேரி: பிரான்ஸ் லுார்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் வில்லியனூர் மாதா கோவில் திருக்குளத்தில் ஊற்றும் சிறப்பு நிகழ்வு நாளை நடக்க உள்ளது.
இது குறித்த பங்குதந்தை ஆல்பர்ட் விடுத்துள்ள அறிக்கை;
புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள துாய லுார்தன்னை ஆலயம் 148 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லுார்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த மசபியேல் என்ற குகையின் அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்லியனுார் மாதா திருக்குளத்தின் நுாற்றாண்டு விழா நாளை 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லுார்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் கலக்கப்பட உள்ளது.
காலை 6 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து மாதா திருக்குளத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடக்கிறது. காலை 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கின்றது.
தொடர்ச்சியாக மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோனிசாமி தலைமையில் நடக்கும் சிறப்புக் கூட்டு திருப்பலிக்கு பின், பிரான்ஸ் லுார்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லியனுார் மாதா திருக்குளத்தில் ஊற்றும் சிறப்பு நிகழ்வு நடக்க உள்ளது. இதன்பின்னர் லுார்து அன்னையின் சொரூபம் தாங்கிய தெப்பல் உற்சவம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.