/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல்: துணை துாதரகத்தில் ஓட்டுப் பதிவு
/
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல்: துணை துாதரகத்தில் ஓட்டுப் பதிவு
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல்: துணை துாதரகத்தில் ஓட்டுப் பதிவு
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல்: துணை துாதரகத்தில் ஓட்டுப் பதிவு
ADDED : ஜூலை 01, 2024 06:43 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை துாதரகத்தில் பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப் பதிவு நடந்தது. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
பிரான்ஸ் பார்லிமென்ட் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பிரான்ஸ் நாட்டுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க குடியிருக்கும் நாட்டில் இருந்து, துாதரகத்தில் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.
அதன்படி, முதல்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கும் வகையில், புதுச்சேரி மற்றும் சென்னைக்கான, பிரெஞ்சு துாதரகத்தின் சார்பில், புதுச்சேரி -2; சென்னை - 1; காரைக்கால் - 1, என 4 இடங்களில் தனித்தனி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று காலை 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து, வரும், 7ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.