/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் பிராங்கோ போனித் திருவிழா
/
தாகூர் அரசு கல்லுாரியில் பிராங்கோ போனித் திருவிழா
ADDED : செப் 02, 2024 01:11 AM

புதுச்சேரி : தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பிரஞ்சு துறை சார்பில் பிராங்கோ போனித் திருவிழா கல்லுாரி கலையரங்கில் நடந்தது.
பிரஞ்சு மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க ஒவ்வொரு ஆண்டும் கல்லுாரி பிரஞ்சு துறை சார்பில், பிராங்கோ போனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு விழாவில், துறை தலைவர் அன்பரசு வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கினார். டாக்டர் சதிஷ் நல்லாம், தனியார் ஓட்டல் நிர்வாகி இந்திராணி பானர்ஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
துணை பேராசிரியர்கள் ஜென்னி, பாவணா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல நாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு மொழிபேசும் மக்களை ஒருங்கிணத்து ஒற்றுமை, சகோதரத்துவத்தை விதைப்பது குறித்து பேசப்பட்டது.
அரசு சார்பில் சிறந்த நிர்வாகி பட்டம் பெற்ற கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாசிற்கு துறை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.