தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி


ADDED : மே 14, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: ஏலச் சீட்டு பணம் தராமல் ஏமாற்றிய தம்பதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு திருமகள் நகரை சேர்ந்தவர் சுவாதி, 24; புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் பேராசிரியராக பணி செய்து வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கோமதி, அவரது கணவர் கவுதம் இருவரும் மாத ஏலச் சீட்டு பிடித்தனர். அதில், சுவாதி, அவரது தாய் இருவரும் தனித்தனியாக ஏலச் சீட்டில் சேர்ந்து பணம் கட்டியுள்ளனர்.

இந்நிலையில், கணவன், மனைவி, குடியிருந்த வீட்டை காலி செய்து அருகில் உள்ள நகருக்கு சென்றுள்ளனர். சுவாதி தான் எடுத்த சீட்டு பணம் 10 லட்சம் ரூபாயை, கோமதியின் வீட்டுக்கு சென்று தொடர்ந்து, கேட்டு வந்தார். சீட்டு பணம் தராமல் பலர் ஏமாற்றியுள்ளதாக அவரிடம் கூறினார். இதுகுறித்து, நேற்று சுவாதி, முதலியார்பேட்டை போலீசில் சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றிய கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கணவன், மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us