/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கட்டட கான்ட்ராக்டரிடம் ரூ.17 லட்சம் மோசடி
/
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கட்டட கான்ட்ராக்டரிடம் ரூ.17 லட்சம் மோசடி
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கட்டட கான்ட்ராக்டரிடம் ரூ.17 லட்சம் மோசடி
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கட்டட கான்ட்ராக்டரிடம் ரூ.17 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 08, 2024 04:21 AM
புதுச்சேரி: திருமணம் செய்து கொள்வதாக கூறி, கட்டட காண்ட்ராக்டரிடம், ரூ.17 லட்சம் ஏமாற்றிய ஆன்லைன் கும்பல் குறித்து, சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி நைனார்மண்டபம் சுதனா நகர் வி.ஓ.சி., வீதியை சேர்ந்தவர் பாலாஜி, 34, கட்டட காண்ட்ராக்டர். இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக தனியார் மேட்ரிமோனி நிறுவனத்தில் பதிவு செய்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 13ம் தேதி இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பெண் ஒருவர் அறிமுகமாகி மேட்ரிமோனி மூலம் உங்களை பார்த்ததாகவும், தான் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் வாட்ஸ் ஆப் மூலம் கடந்த 3 மாதமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பெண் எனக்கு தெரிந்த ஒருவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், நான் இந்தியா வந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய பாலாஜி, அப்பெண் கூறிய பங்குச்சந்தை எண்ணிற்கு ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். அதன்பிறகு அப்பெண் அவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.
அதன்பிறகு தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த பாலாஜி, சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.