ADDED : செப் 16, 2024 05:45 AM
புதுச்சேரி : இருவரிடம் நுாதன முறையில் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவனேஷ், 32; இவர் வேலைவாய்ப்புக்காக இணையதளப் பகுதியில் பதிவு செய்துள்ளார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் விமானப்படையில் வேலை இருப்பதாகக் கூறி, அதற்காக ,ஆவணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக மர்மநபர் கூறிய வங்கிக் கணக்கில் பல முறை ரூ.1.73 லட்சம் வரை செலுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றினார்.
இதேபோல், மூலக்குளம் களத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த மணிமொழியிடம், குறைந்த வட்டியில் மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற்றுத் தருவதாகக் மர்ம நபர் கூறியதை நம்பி, ரூ. 2.30 லட்சம் மர்ம நபர் வங்கிகணக்கு செலுத்தி ஏமாந்துள்ளார்.
இருவரும் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
