ADDED : ஆக 22, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: வில்லியனுாரை சேர்ந்த குமார் என்பவரை தொடர்பு கொண்ட நபர், பகுதி நேர வேலை உள்ளது. அதற்கு முன், பணம் அனுப்புமாறு கூறினார். அதை நம்பி, அவர், ரூ. 1.65 லட்சம் அனுப்பி ஏமாந்தார்.
திலாசுபேட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆன்லைன் மூலம் பருப்பு ஆடர் செய்து 10 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். காரைக்கால் சத்தியமூர்த்தி என்பவரை தொடர்பு கொண்ட நபர், சி.பி.ஐ., அதிகாரி போல பேசி, உங்கள் மகள் பண மோசடியில் சிக்கியுள்ளார். அவரை விடுக்க பணம் வேண்டும் என்றார். அதற்கு பயந்து, அவர், ரூ. 55 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.