/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நண்பர்கள் போல 'மெசேஜ்' அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல் உஷாரய்யா... உஷாரு...
/
நண்பர்கள் போல 'மெசேஜ்' அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல் உஷாரய்யா... உஷாரு...
நண்பர்கள் போல 'மெசேஜ்' அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல் உஷாரய்யா... உஷாரு...
நண்பர்கள் போல 'மெசேஜ்' அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல் உஷாரய்யா... உஷாரு...
ADDED : ஆக 25, 2024 05:43 AM
நண்பர்கள் போல மெசேஜ் அனுப்பி, பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமாக புகைப்படங்களை நாம் டி.பி.,புகைப்படமாக வைத்துள்ளனர். உங்களின் இந்த டி.பி., படத்தை டவுன்லோடு செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பணம் பறிப்பது சமீபகாலமாக புதுச்சேரியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக உங்களின் டி.பி., படத்தை போட்டு, நீங்களே உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதுபோல், நான் ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன். பிளீஸ் பணம் அனுப்பு நண்பா என்று குறுஞ்செய்தி அனுப்பி பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால் உஷாராக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'உங்களை பற்றிய விவரங்களை இணையதளங்கள் மூலம் இந்த மோசடிக் கும்பல் முதலில் சேகரிக்கும். உங்களின் புகைப்படங்களையும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எடுப்பார்கள். அதன் பிறகு உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் கால் அல்லது மெசேஜ் செய்யும் இந்தக் கும்பல், அனைவரும் நம்பும்படி வாட்ஸ் ஆப்பில் உங்களின் புகைப்படங்களை டி.பி., போட்டோவாக வைத்திருக்கும்.
அதனால் உங்களது நண்பர்கள் அனைவரும் நீங்கள் தான் வாட்ஸ்அப் காலில் பேசுகின்றீர்கள் என நம்பி, மோசடிக் கும்பலிடம் பேசுவார்கள். குறுஞ்செய்தியும் அனுப்புவார்கள். அதன் பிறகே தங்களின் மோசடித் திட்டத்தை இந்தக் கும்பல் செயல்படுத்தும்.
அவர்கள் கூறியதுபோன்று நம்பி, பணத்தை அனுப்பியதும் மொபைல்போனை சுவிட்சு ஆப் செய்துவிட்டு, அடுத்த மோசடிக்கு இந்தக் கும்பல் தயாராகிவிடும். இதுபோன்று மெசேஜ் அல்லது அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம். சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு, உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்' என்றனர்.