/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச கண் பரிசோதனை சட்ட விழிப்புணர்வு முகாம்
/
இலவச கண் பரிசோதனை சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 24, 2024 06:49 AM

அரியாங்குப்பம்,: கொருக்குமேடு புனித அன்னாள் ஆலயத்தின் 101வது ஆண்டு விழாவையொட்டி, இலவச கண் பரிசோதனை மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடந்தது.
ஈவ்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஜோதி கண் பராமரிப்பு மையம் இணைந்து நடத்திய இந்த முகாம்களை, புனித அன்னாள் ஆலயத்தின் பாதிரியார் அருள்தாஸ் துவக்கி வைத்தார். ஈவ்ஸ் ரோட்டரி சங்க தலைவர் அனுராதா வரவேற்றார்.
சட்ட விழிப்புணர்வு முகாமில் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மரி அன்னா தயாவதி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் டாக்டர் வனஜா வைத்தியநாதன் மற்றும் குழுவினர், கண் பரிசோதனை செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கண் பிரச்னை உள்ளவர்களுக்கு இலவசமாக சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
முகாமில், ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் மேரி ஸ்டெல்லா, நிர்வாக செயலர் குலோத்தின், பொருளாளர் மேரிகலா, உறுப்பினர்கள் ராஜலட்சுமி, கிருஷ்ணவேணி, விஷ்ணுபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.