ADDED : மே 02, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தட்டாஞ்சாவடியில் இலவம் பஞ்சு வெடித்து காற்றில் பறக்க துவங்கியது.
புதுச்சேரியில் கோடை வெயில் காலத்தில், இலவம் பஞ்சு மரங்களில் காய்கள் வெடித்து பஞ்சு வெளியே வருவது வழக்கம். புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா, தட்டஞ்சாவடி தொழிற்பேட்டை முகப்பு, மரப்பாலம் சந்திப்பு என பல இடங்களில் இலவம் பஞ்சு மரங்கள் உள்ளன.
இந்த மரங்களில் உள்ள காய்கள் கோடை வெயிலில் வெடித்துள்ளது. அதில் உள்ள பஞ்சுகள் காற்றில் பறக்க ஆரம்பித்து விட்டன.
காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகள், சாலையில் வாகனத்தில் செல்வோர் கண்ணில் பட்டு நிலை குலைய செய்கிறது. சில நேரம் விபத்துகளும் நடக்கிறது.

