/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 1 லட்சம் பேருக்கு இலவச இன்சுலின் பரிசோதனை
/
புதுச்சேரியில் 1 லட்சம் பேருக்கு இலவச இன்சுலின் பரிசோதனை
புதுச்சேரியில் 1 லட்சம் பேருக்கு இலவச இன்சுலின் பரிசோதனை
புதுச்சேரியில் 1 லட்சம் பேருக்கு இலவச இன்சுலின் பரிசோதனை
ADDED : டிச 07, 2024 07:17 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் டாக்டர் புளூ இந்தியா அறக்கட்டளையின், இன்சுலின் மேம்படுத்தும் திட்ட அறிமுக விழா, மூலக்குளம், கிழக்கு கடற்கரை மருத்துவமனையில் நடந்தது.
ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனைகளின் தலைவர் முருகேசன், இந்தியர்களின் ஆயுட்காலத்தை 10 ஆண்டுகள் நீட்டிக்க புதிய திட்டத்தை அறிவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், சுகாதாரம் மற்றும் குடும்ப நலசேவைகள் இயக்குநரக முன்னாள் இயக்குநர் திலீப்குமார் பாலிகா, குளூனி மருத்துவமனை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கநாத், இந்திய அரசின் நறுமண பொருட்கள் வாரியத்தின் இயக்குநர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிழ்ச்சியில் டாக்டர் முருகேசன் பேசுகையில், 'இன்சுலினை மேம்படுத்துதல் குறித்த என்னுடைய ஆராய்ச்சியே, இந்த திட்டத்தின் மையப்பொருள். ரத்தத்தில் சர்க்கரை இல்லா விட்டாலும், உயர்ந்த இன்சுலின் அளவுகள், சர்வதேச அளவில் இறப்புகளில், 75 சதவீதம் பங்களிக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த, இந்த சுகாதார சவாலை உணர்ந்து, இன்சுலின் பரிசோதனையை வழக்கமான உடல் நல பரிசோதனைகளில் ஒன்றாக ஒருங்கிணைக்க வேண்டும். இது நோய் தடுப்பு சுகாதார பாதுகாப்பில், ஒரு முன்னேற்ற படியாகும்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 1 லட்சம் பேருக்கு அறக்கட்டளை மூலம், ரூ. 30 கோடி மதிப்பில், இலவசமாக இன்சுலின் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவதில் கைகோர்க்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அமைப்புகள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்' என்றார்.
விழாவில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.