/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடற்றவர்களுக்கு இலவச மனை பட்டா இந்திய கம்யூ., வலியுறுத்தல்
/
வீடற்றவர்களுக்கு இலவச மனை பட்டா இந்திய கம்யூ., வலியுறுத்தல்
வீடற்றவர்களுக்கு இலவச மனை பட்டா இந்திய கம்யூ., வலியுறுத்தல்
வீடற்றவர்களுக்கு இலவச மனை பட்டா இந்திய கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஆக 30, 2024 05:45 AM
புதுச்சேரி: வீடற்ற மக்களை கணக்கெடுத்து இலவசமனைப்பட்டா வழங்க வேண்டும் என இந்திய. கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூ., வில்லியனுார், மங்கலம், ஊசுடு தொகுதி குழு கூட்டம் வில்லியனூர் அலுவலகத்தில் நடந்தது. தொகுதி துணை செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். உறுப்பினர் இயக்கம் குறித்து தொகுதி செயலாளர் பெஞ்சமின் பேசினார்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி, அன்துவான் பேசினர். கூட்டத்தில் தொகுதி குழு உறுப்பினர்கள் கணேசன், நாசர், பாத்திமா, கிளைச் செயலாளர் சூசை ராஜ், சரவணன், பாலதண்டாயுதம் பங்கேற்றனர்.
வில்லியனுார், மங்கலம், ஊசுடு தொகுதிகளில் கணக்கெடுத்து இலவசமாக வீடற்றவர்களுக்கு வீட்டு மனைகளை வழங்க வேண்டும். வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.