/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.சி.,-எஸ்.டி.,1000 பேருக்கு இலவச மனைப்பட்டா
/
எஸ்.சி.,-எஸ்.டி.,1000 பேருக்கு இலவச மனைப்பட்டா
ADDED : மார் 11, 2025 05:52 AM
புதுச்சேரி: வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வரும் ஆண்டில் 1000 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத்துறை வளர்ச்சி தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் பட்ஜெட் உரையாற்றி பேசியதாவது: தொழில்நுட்பம் சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளமாகும். நிர்வாகத்தில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்பட இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கோப்புகளின் செயலாக்கத்தை தானியங்கு முறையில் அனைத்து துறைகளிலும் பயன்படுத்த மின்னனு- அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய தகவலியல் மையத்திலிருந்து 10 ஆயிரம் பயனர் உரிமங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுவரை, 3,585 மின்னனு அலுவலக பயனர் முகவரிகள் உருவாக்கப்பட்டு, 22,425 மின்னனு கோப்புகள் மற்றும் 1,11,147 மின்னனு- தபால்கள், மின்னனு- அலுவலகத்தில் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மின்னனு- அலுவலகம் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டு, அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், மின்னனு அலுவலக செயலாக்கம் விரிவுபடுத்தப்பட உள்ளது. வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் மணப்பட்டு மற்றும் டி.என்.பாளையம் பகுதியில் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 340 நபர்களுக்கு இலவச மனைப்பட்டா கூடிய விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் இது 1000 பேருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.