
புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி, பிரைடு ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய மருத்துவ கழகம் புதுச்சேரி கிளை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தர்ம சம்ரக் ஷண சமிதி மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமை, பள்ளி தாளாளர் ரமேஷ் துவக்கி வைத்தார்.
முகாமில் பொதுமருத்துவம், பல் மருத்துவம், இதயம், தோல், நரம்பியல், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, கண் மருத்துவம், குழந்தை சிகிச்சை, மகப்பேறு, எலும்பு மற்றும் சீறுநீரக பிரிவின் கீழ் டாக்டர்கள் சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர்.
ஒருங்கிணைப்பாளர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். காலை 8:30 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை நடந்த முகாமில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றனர்.