ADDED : ஜூலை 14, 2026 10:12 PM
காரைக்கால்.ஜுலை 15 -: காரைக்கால் பிரெஞ்சு குடியரசு தினவிழாவை முன்னிட்டு நினைவு சின்னத்திற்கு கலெக்டர் இஷிதாராட்டி முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பிரஞ்சு நினைவு சின்னத்தில் பிரஞ்சு குடியரசு தின விழா இந்திய சுதந்திரம் அடைந்த நிலையில் ஆண்டுதோறும் புதுச்சேரி. காரைக்கால் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் விடுதலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரெஞ்சு குடியரசு தின 237ம் ஆண்டை முன்னிட்டு இருநாட்டின் கொடிகள் இசைக்கப்பட்டு இதன் தொடர்ச்சியாக காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தை எதிரியே உள்ள இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி நேற்று கலெக்டர் இஷிதா ராட்டி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி பிரஞ்சு தூதரக அதிகாரி ஃபெபியன்ரொசோ முன்னிலை வகித்தார். இதில் உன்னால் ராணுவ வீரர்கள் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர்கள் போல கலந்து கொண்டனர்.
