திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஆன்மிக நடை பயணம்
திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஆன்மிக நடை பயணம்
ADDED : ஏப் 25, 2024 03:36 AM

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து துவங்கிய பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடந்து சென்றனர்.
வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும் 18 சித்தர்கள் ஜீவ சமாதியுடன் ஆன்மிக பூமியாக திகழ்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர். சித்திரை மாத பவுர்ணமி நாளில் ஆன்மிக நடைபயணம் செல்வது 12 மாத பவுர்ணமி நாளில் ஆன்மிக நடைபயணம் சென்றதற்கு ஈடானது.
அதன்படி நேற்று 27 வது மாத ஆன்மிக நடைபயணத்தை முன்னிட்டு மாலை 5:30 மணிக்கு சிறப்பு அபிேஷகமும், அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடைபயணம் மாட வீதிகளின் வழியாக ராம்பரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சித்தர் பீடம், ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் ஆலயம், ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில் தரிசனத்துடன் உறுவையாறு, கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை இரவு 10 மணிக்கு மேல் வந்தடைந்தனர்.
வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் துவங்கிய ஆன்மிக நடைபயத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
