/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாபர்மேன் நாய்க்கு இறுதி சடங்கு புதுச்சேரியில் நெகிழ்ச்சி
/
டாபர்மேன் நாய்க்கு இறுதி சடங்கு புதுச்சேரியில் நெகிழ்ச்சி
டாபர்மேன் நாய்க்கு இறுதி சடங்கு புதுச்சேரியில் நெகிழ்ச்சி
டாபர்மேன் நாய்க்கு இறுதி சடங்கு புதுச்சேரியில் நெகிழ்ச்சி
ADDED : மே 16, 2024 10:55 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் இறந்த டாபர் மேன் நாய்க்கு இறுதி சடங்கு செய்து, வீட்டிலேயே புதைத்தது சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, கதிர்காமம் நேரு வீதியை சேர்ந்தவர் மதி, 38; பிளம்பர். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் டாபர் மேன் நாய்க்கு ரேம்போ என பெயர் வைத்து வளர்த்த வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்ட ரேம்போ, நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தது. அதன் மறைவு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, நாயிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டினர்.
அது மட்டுமின்றி தனது குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் என்ன சடங்குகள் செய்வோமோ அதே போன்று அனைத்தையும் செய்தனர்.
வீட்டில் முன், பந்தல் போட்டு, சவப்பெட்டியில் ரேம்போவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
புரோகிதர் வைத்து, இறுதி சடங்குகளை செய்து வீட்டுக்குள் புதைத்தனர்.
மதி கூறுயில், 'எங்கள் வீட்டில் ஒருவராக வளர்ந்த ரேம்போ இழப்பினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதற்கு அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து, வீட்டில் எந்த இடத்தில் துள்ளி குதித்து விளையாடுமோ அந்த இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்தோம்' என்றார்.

