/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
/
விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
ADDED : செப் 10, 2024 06:51 AM
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழாவில், வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை கடற்கரையில் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி நகர பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீடுகளில் களிமண் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்தினர்.
மூன்று நாட்கள் பின்னர் பொதுமக்கள் நேற்று விநாயகர் சிலைகளை காலையில் முதல் கடலில் கொண்டு வந்து கரைத்தனர். கடல் பகுதிக்கு கரைக்க கொண்டும் வரும் விநாயகர் சிலைகளை அப்பகுதி உள்ள மீனவர்கள் கடலில் கரைப்பதற்கு உதவி செய்தனர். அதே போல் கனகன் ஏரியிலும் வீட்டில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நாளை 11ம் தேதி விநாயகர் சிலைகள் கடலில், விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

