/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனையில் தேங்கிய குப்பைகள் சிறப்பு துப்புரவு முகாமில் அகற்றம்
/
திருபுவனையில் தேங்கிய குப்பைகள் சிறப்பு துப்புரவு முகாமில் அகற்றம்
திருபுவனையில் தேங்கிய குப்பைகள் சிறப்பு துப்புரவு முகாமில் அகற்றம்
திருபுவனையில் தேங்கிய குப்பைகள் சிறப்பு துப்புரவு முகாமில் அகற்றம்
ADDED : மார் 10, 2025 06:14 AM
திருபுவனை: திருபுவனையில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தால் தேங்கிய குப்பைகள் சிறப்பு துப்புரவு முகாம் மூலம் அகற்றப்பட்டது.
புதுச்சேரி முழுதும் ஹெச்.ஆர்., ஸ்கொயர் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிறுவன துப்புரவு பணியாளர்கள், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்கக்கோரியும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து முறையிட்டனர்.
நெட்டப்பாக்கம, பாகூர்கொம்யூன் பகுதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், திருபுவனையில் துப்புரவு தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால் புதுச்சேரி முழுதும் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோவில் உட்பட பல இடங்களில் குப்பைகள் அதிகரித்தது. இந்நிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் எழில்ராஜன் உத்தரவின்பேரில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் சிறப்பு துப்புரவு முகாம் கடந்த 8ம் தேதி துவங்கியது.
கடந்த 2 நாட்களில் திருபுவனை நான்கு வழிச்சாலை, திருக்கனுார் சாலை, மடுகரை சாலை, கடலுார் சாலை, திருவாண்டார்கோவில் - கொத்தபுரிநத்தம் சாலை உள்ளிட்ட கிராமப்புற சாலைகள், முக்கிய கடை வீதிகள் உட்பட பல இடங்களில் தேங்கிக் கிடந்த குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள் அகற்றினர்.
இப்பணியை, கமிஷனர் எழில்ராஜன் மேற்பார்வையில், உதவிப் பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் ஆய்வு மேற்கொண்டனர்.