/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்
/
தாகூர் கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்
ADDED : மார் 27, 2024 11:39 PM

புதுச்சேரி : லாஸ்பேட்டை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் புதுச்சேரி எய்ட்ஸ் சொசைட்டி சார்பில் பொது மருத்துவ முகாம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
சுகாதாரத் துறை ஆலோசகர் ராஜா அண்ணாமலை தலைமை தாங்கி, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கினார். கல்லூரி முதல்வர் சசி காந்த தாஸ் கருத்துரை வழங்கினார்.
கல்லுாரி சமூகவியல் துறைத் தலைவர் எப்சிபா, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ட சுவாமி, தீபக் ஆகியோர் முகாமினை வழி நடத்தினர். முகாமில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முகாமில் கல்லுாரி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எச்.ஐ.வி., பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டது.