தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராமகிருஷ்ணன் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

ராமகிருஷ்ணன் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

ராமகிருஷ்ணன் பள்ளி மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஜூலை 27, 2024 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேங்காய்த்திட்டு ராமகிருஷ்ணன் அரசுப் பள்ளியில், 10,ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி, தேங்காய்த்திட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். புதுவை அரசு இதழின் ஆசிரியர் மற்றும் கவிஞர் பாரதிதாசனின் மூத்த மாணவர். இவர் தேங்காய்த்திட்டில் அரசு பள்ளிக்கு வருவதற்கு முன்பாக, பஜனை மடத்தில் இலவச பாடசாலை நடத்தியவர் என்பதால், இவரது பெயரில், தேங்காய்த்திட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராமகிருஷ்ணனின், 117,வது பிறந்தநாளையொட்டி, அப்பள்ளியில், 10,ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர் பூங்குன்றன் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினர்.

நிறைவாக ஓய்வு பெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் சித்ரா ஜோதிமணி நன்றி கூறினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஜோதிமணி மற்றும் ராமகிருஷ்ணனரின் குடும்பத்தினர் மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us