/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பலாத்கார கொலை வழக்கு; கைதி தற்கொலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை
/
சிறுமி பலாத்கார கொலை வழக்கு; கைதி தற்கொலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை
சிறுமி பலாத்கார கொலை வழக்கு; கைதி தற்கொலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை
சிறுமி பலாத்கார கொலை வழக்கு; கைதி தற்கொலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை
ADDED : செப் 18, 2024 06:26 AM

புதுச்சேரி, : சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைதாகி, சிறையில் தற்கொலை செய்து கொண்ட விவேகானந்தன் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி மாயமானார். 3 நாட்கள் கழித்து, சிறுமியின் உடல், கழிவுநீர் வாய்க்காலில் மீட்கப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கருணாஸ், 19; விவேகானந்தன், 57; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது. 572 பக்க குற்றப்பத்திரிகையை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கடந்த மாதம் 27ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸ், விவேகானந்தன் இருவரும் குற்றத்தை மறுத்ததால், விசாரணை நேற்று 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்த விவேகானந்தன், நேற்று முன்தினம் காலை கதவு இரும்பு கம்பியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் உடல் நேற்று காலை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
மாஜிஸ்ரேட் ரமேஷ், தாசில்தார் ராஜேஷ்கண்ணா, எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் குமார், விவேகானந்தனின் மகன் பிரபாகரன் முன்னிலையில் ஜிப்மர் டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது.
மதியம் 1:30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து, ஒப்படைக்கப்பட்ட விவேகானந்தன் உடல், கோட்டக்குப்பத்தில் அவரது மகன் பிரபாகரன் வசிக்கும் வாடகை வீட்டில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டு, கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு, மாஜிஸ்திரேட் ரமேஷ், காலாப்பட்டு மத்திய சிறையில் விவேகானந்தன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தனி அறையை பார்வையிட்டு, சிறை வார்டன்களிடம் விசாரணை நடத்தினார்.
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நேற்று மிலாடி நபி என்பதால், நாளை 19ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.